அதிமுக கூட்டணி- பாமக முடிவு?; அன்புமணி ராஜினாமா?

திமுக கூட்டணிக்கு பாமகவை இழுக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக முயன்று வந்தாலும் ராமதாஸை அதிமுக பக்கம் கொண்டு செல்ல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.
இதன் அடிப்படையில் அதிமுகவுடன் பாமகவுக்கு டீல் நடந்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் தர அதிமுக ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் இதனால் அவர்களுடனேயே கூட்டணி அமைக்க டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளை பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது.
பாமக பொதுக் குழு 26ம் தேதி காலை கூடுகிறது. இதில் கூட்டணி பற்றிய அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் வெளியிடுவார் என்கிறார்கள்.
இருப்பினும் ராமதாஸை எப்படியாவது கூட்டணியில் நீடிக்கச் செய்ய காங்கிரஸ் இறுதிக் கட்ட முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந் நிலையில் மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதே போல தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், ராமதாசின் சம்பந்தியான முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் டெல்லி விரைந்துள்ளனர்.
இன்று மாலை சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேலை அன்புமணி சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது. அப்போது தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோரும் படேலுடன் இருப்பர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனது மத்திய அமைச்சர் பதவிகளை அன்புமணியும், ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலுவும் ராஜினாமா செய்துவிட்டுத் திரும்புவர் என்று தெரிகிறது.
காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டும் என போராடிக் கொண்டிருப்பவர் அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications