யுபிஏ-257, தேஜகூ-184, 3வது அணி-96: ஸ்டார்-நீல்சன் சர்வே
டெல்லி: லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 257 தொகுதிகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 184 இடங்களும், 3வது அணிக்கு 96 சீட்களும் கிடைக்கும் என ஸ்டார் டிவியும், ஏ.சி.நீல்சன் நிறுவனமும் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்-நீல்சன் கருத்துக் கணிப்பின்படி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கையே தற்போதைக்கு ஓங்கியுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டபோது, இக்கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜன சக்தி கட்சி, சமாஜ்வாடி கட்சி ஆகியவையும் சேர்த்து கணக்கிடப்பட்டது.
ஆனால் தற்போது இந்த மூன்று கட்சிகளுமே காங்கிரஸுடன் உடன்பாடு செய்து கொள்ளாமல் தனித் தனியாக போட்டியிடுகின்றன. எனவே வெற்றி விகிதத்தில் மாறுபாடு காணப்படும்.
இருப்பினும் இவர்கள் மூன்று பேருமே தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸுடன்தான் சேருவார்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 257 இடங்கள் வரை கிடைக்கும். இவர்கள் இல்லாத காங்கிரஸ் கூட்டணிக்கு 210 இடங்கள் வரை கிடைக்கும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 184 இடங்களும், 3வது அணிக்கு 96 இடங்கள் வரையும் கிடைக்கலாம்.
தமிழகத்தில் திமுகவுக்கு சரிவு...
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முறை திமுக கூட்டணிக்கு சரிவு ஏற்படும். கடந்த முறை ஒரு சீட் கூட வாங்காமல் போன அதிமுகவுக்கு இந்த முறை 9 சீட் கிடைக்கலாம். திமுக கூட்டணிக்கு 24 சீட்கள் கிடைக்கலாம். (இதில் பாமக அடக்கமா இல்லையா என்ற விவரம் இல்லை)
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 13 சீட்களும், சிவசேனாவுக்கு 12 சீட்களும் கிடைக்கலாம். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், ஆர்.பி.ஐ ஆகியவை இணைந்து 26 இடங்களையும், சிவசேனா, பாஜக கூட்டணி 22 சீட்களையும் பிடிக்கலாம்.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு சரிவு ஏற்படலாம். காரணம், லாலுவும், பாஸ்வானும் சேர்ந்து காங்கிரஸை நட்டாற்றில் விட்டதால்.
கடந்த முறை பீகாரில் 24 சீட்களை வென்றது லாலு கட்சி. ஆனால் இந்த முறை 11 சீட் வரை கிடைக்கலாம். பாஸ்வானுக்கு கடந்த முறை நான்கு சீட் கிடைத்தது. ஆனால் இந்த முறை லாலு புண்ணியத்தால் 6 சீட் வரை வெல்லலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளத்திற்கு 16 சீட் வரை கிடைக்கலாம். கடந்த முறை இக்கட்சிக்கு 8 சீட்தான் கிடைத்தது.
ஓரிசாவில் பாஜகவுக்கு லாபம்...
ஒரிசாவில் பாஜக உறவைத் துண்டித்து விட்ட பிஜூ ஜனதாதளத்திற்கு சரிவு ஏற்படலாம். கடந்த முறை பிஜூ ஜனதாதளம் 11 சீட்களை வென்றிருந்தது. ஆனால் இந்த முறை 2 சீட் குறைந்து 9 கிடைக்கலாம்.
ஆந்திராவில் தெலுங்கு தேசதத்திற்கு நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த முறை அங்கு 5 சீட்களை மட்டுமே வென்ற சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த முறை 14 சீட்கள் கிடைக்கலாம். இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு 22 சீட் கிடைக்கும் என்பதால், தெலுங்கு தேசம் பின் தங்கியே காணப்படுகிறது.
இதெல்லாம் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் பின்னர் காலை வாரி விட்டதற்கு முன்பு கணிக்கப்பட்டவை. அதன்பின்னர் நிலைமை மாறியுள்ளதால், இந்த கணிப்பிலும் சரிவு காணப்படலாம்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications