இலங்கை-25 சிறார்கள் உள்பட 102 தமிழர்கள் கொலை
வன்னி: இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் 25 சிறார்கள் உள்பட 102 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று காலை இந்த அகோர தாக்குதல் நடந்துள்ளது. அதிகாலை முதல் இலங்கைப் படைகள் நடத்திய எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவன்பொக்கணை பகுதிகளில் திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் அதிகாலை முதல் அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறார்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.
மாத்தளன் பகுதியை நோக்கி நேற்று காலை முதல் இரவு 7 மணிவரை இடைவிடாமல் நடத்திய தாக்குதலில் மட்டும் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இடைவிடாது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முழுமையாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகமானோர் உடல் சிதறிப் பலியானதாகவும் புதினம் இணையதளம் தெரிவிக்கிறது.
தொடர்ச்சியான எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல்களால் இப்பகுதியில் காயமடைந்தவர்களை மீட்புப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications