திமுக கூட்டணி-பட்டியல் வெளியீடு: பாமக இல்லை

பாமக, தேமுதிக ஆகியவற்றின் இழுத்தடிப்பு காரணமாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை.
கூட்டணி இல்லை என்றரீதியில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் பேச ஆரம்பித்துவிட்டார். ஆனால், பாமக தான் இன்னும் குழப்பி வருகிறது. திமுக, அதிமுகவுடன் ஒரே நேரத்தில் மறைமுகப் பேச்சு நடத்தி வரும் பாமக இலங்கை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியைத் தாக்கி புதிய அறிக்கை விட்டுள்ளது. இது அதிமுகவை சந்தோஷப்படுத்தவே என்கிறார்கள் சிலர். இல்லை, இது திமுகவை நெருக்கி கூடுதல் தொகுதிகள் பெறவே என்கிறார்கள் பலர்.
இந் நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள் குறித்த பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
அதன்படி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் விவரம் ...
திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இன்னும் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்போம். புதிய கட்சிகள் கூட்டணியில் சேருமானால் அப்போது அதையும் தெரிவிப்போம்.
தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் என்னை வந்து சந்தித்தபோது, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்ற கூட்டணி பற்றி விவாதித்தோம் என்றார் கருணாநிதி.
வேறு கட்சிகள் சேருமானால் அதை அறிவிப்போம் என்று முதல்வர் கூறியுள்ளது பாமக அல்லது தேமுதிகவையே குறிப்பதாகத் தெரிகிறது.
26ம் தேதி பாமகவின் செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் தான் கூட்டணி முடிவை பாமக அறிவிக்கிறது.
இதை மனதில் வைத்துத்தான் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளதாக நம்பப்படுகிறது. எனவே பாமகவின் முடிவுக்காக கருணாநிதி காத்திருப்பது தெளிவாகிறது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications