மக்களவை தொகுதி அறிமுகம்: புதுச்சேரி

Subscribe to Oneindia Tamil

Puducherry
புதுச்சேரி: முன்னாள் பிரெஞ்சுக் காலனியான பாண்டிச்சேரி (தற்போது புதுச்சேரி) காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத லோக்சபா கோட்டைகளில் ஒன்று.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் ஆகியவை இணைந்ததே புதுச்சேரி. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம், சந்தர்நகர் ஆகியவற்றில் மொத்தம் 30 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அனைத்தும் இணைந்ததே புதுச்சேரி லோக்சபா தொகுதி.

பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்து வரும் தொகுதி புதுச்சேரி. இருப்பினும் திமுக, அதிமுக, பாமக ஆகியவையும் தலா ஒரு முறை இங்கு வெற்றி பெற்றுள்ளன.

எம்.ஓ.எச்.பாரூக், சண்முகம் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் தலா மூன்று முறை எம்.பி ஆகியுள்ளனர்.

கடந்த தேர்தல் நிலவரம்

புதுச்சேரியில் கடந்த 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாமக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக, புதுச்சேரி கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து பெற்றது.

ஆனால் இதை ஆரம்பத்தில் காங்கிரஸார் ஏற்கவில்லை. பெரும் போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை கட்சித் தலைமை சமாதானப்படுத்தியது.

இதனால் வேறு வழியின்றி தங்களது ஏமாற்றத்தை அடக்கிக் கொண்டு பாமகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் காங்கிரஸார்.

பாமக சார்பில் பேராசிரியர் ராமதாஸ் போட்டியிட்டு 2 லட்சத்து 41 ஆயிரத்து 653 வாக்குகளைப் பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் லலிதா குமாரமங்கலம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 472 வாக்குகள் பெற்றார்.

69 ஆயிரத்து 181 வாக்குகள் வித்தியாசத்தில் பேராசிரியர் ராமதாஸ் வெற்றி பெற்றார்.

புதுச்சேரி எம்.பியாக இதுவரை இருந்தவர்கள் ..

1967 - என்.சேதுராமன் - காங்.
1971 - மோகன் குமாரமங்கலம் - காங்.
1977 - அரவிந்த பால பிரஜனர் - அதிமுக.
1980 - ப.சண்முகம் - காங்.
1984 - ப.சண்முகம் - காங்.
1989 - ப.சண்முகம் - காங்.
1991 - எம்.ஓ.எச்.பாரூக் - காங்.
1996 - எம்.ஓ.எச்.பாரூக் - காங்.
1998 - எஸ்.ஆறுமுகம் - திமுக.
1999 - எம்.ஓ.எச்.பாரூக் - காங்.
2004 - பேராசிரியர் எம்.ராமதாஸ் - பாமக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+