For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமாவாசைக்கு காத்திருக்கும் தமிழக கட்சிகள்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை வரும் 26ம் தேதி அறிவிக்கவுள்ளன. காரணம், அன்றைய தினம் நிறைந்த அமாவாசையாகும்.

வரும் வியாழக்கிழமை நிறைந்த அமாவாசை தினம் வருகிறது. வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகும், அதுவும் அன்றைய தினம் சித்த யோகத்துடன் கூடிய நிறைந்த அமாவாசையும் கூடி வருகிறது.

அதன் பிறகு வளர்பிறை ஆரம்பிப்பதால், அன்றைய தினம் தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெல்லும் என்பது நம்பிக்கை.

இதில் பெரும் நம்பிக்கை கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அன்றைய தினம் தனது வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

பாஜகவும் அன்றைய தினமே வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அன்றுதான் கன்னியாகுமரியில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் இருக்கும் பாமகவின் பொதுக்குழு கூட்டமும் அன்றுதான் கூடுகிறது. கூட்டணி பற்றிய முக்கிய முடிவை அன்று தான் அதன் தலைவர் டாக்டர் ராமதாஸ் எடுக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X