ராமதாஸை இழுக்க திருமாவளவன் இறுதி முயற்சி!
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசினார். திமுக கூட்டணியில் சேருமாறு பாமகவை அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
முன்னதாக நேற்று மாலை திமுக கூட்டணியில் சேர பாமக முடிவெடுத்து விட்டதாக வேகமாக தகவல் பரவ ஆரம்பித்தது.
டாக்டர் ராமதாஸை, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்தித்ததாகவும், அவரிடம் திமுக 6 தொகுதிகள் தரும், நாங்கள் எங்களுக்குத் தரும் 2 தொகுதிகளைத் தருகிறோம் என்று கூறியதாகவும், இதற்கு ராமதாஸ் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை தங்கபாலு பின்னர் மறுத்தார்.
இந் நிலையில் டாக்டர் ராமதாஸை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மாலை சந்தித்தார். அவருடன் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமாரும் உடன் சென்றிருந்தார். ராமதாஸுடன் நீண்ட நேரம் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது திமுக கூட்டணிக்கு வர ராமதாஸ் சில நிபந்தனைகளைப் போட்டதாகவும் இதை திமுகவிடம் திருமாவளவன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிபந்தனைகளுக்கு திமுக உடன்பட்டால் கூட்டணிக்குத் திரும்ப பாமக தயார் என்று தெரிகிறது. ஆனால், நிபந்தனைகளை ஏற்க திமுக தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பாமக, அதிமுக பக்கம் போவதை தடுக்க முடியாது என்கிறார்கள்.
இருப்பினும் பாமகவை எப்படியாவது திமுக கூட்டணிக்குள் கொண்டு வர கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் திருமா. அதேபோல டெல்லியிலும் பாமகவை அதிமுக பக்கம் போய் விடாமல் தடு்க்க காங்கிரஸ் தலைவர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications