Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவி கொலை- கணவன் நாடகம் அம்பலம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: நீண்டநாட்களாக திட்டமிட்டு மனைவிக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்துவிட்டு மனைவி உடல்நலம் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக நாடகமாடிய கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள புதூரைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (59). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவருடைய வளர்ப்பு மகள் காயத்திரிக்கும் (23), கவுந்தப்பாடியில் கம்ப்யூட்டர் நிறுவனம் வைத்திருந்த கவுதமன் என்பவருக்கும் கடந்த 2005ல் திருமணம் நடந்தது.

சமீபகாலமாக இவரது தொழில் முடங்கி, கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைக்க சிவலிங்கம் அடிக்கடி பணம் கொடுத்து உதவியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தன் மனைவி காயத்திரிக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தார். அதற்கும் பணம் வேண்டுமென்று சிவலிங்கத்திடம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் காயத்திர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் புதைக்கப்பட்டது.

இந்நிலையில் சிவலிங்கத்துக்கு தனது வளர்ப்பு மகள் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர் போலீசிலி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பிணத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்தனர். அதில் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.

பிரேத பரிசோதனை நடக்கவிருப்பதை அறிந்த கவுதமன் தலைமறைவானார். போலீசார் அவரை தேடியநிலையில் நேற்று அவர் சலங்கபாளையம் கிராம நிர்வாக அதிகாரி முன்பு சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், காயத்திரிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறினால் சிவலிங்கம் உடனடியாக பணம் கொடுப்பார் என கருதி கவுதமன் காயத்திரிக்கு இன்சுலின் மருந்தை அதிக அளவில் செலுத்தி மயக்க நிலையிலேயே வைத்து இருந்திருக்கிறார். ஒரு சமயத்தில் தன்னுடைய நாடகத்தை காயத்திரி, மாமனார் சிவலிங்கத்திடம் கூறி விடலாம் என பயந்து போன கவுதமன், அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+