ரயில்களில் 'சைட் மிடில் பெர்த்' அகற்றப்படுகிறது!
சென்னை: எக்ஸ்பிரஸ் ரயில்களில் அமைக்கப்பட்ட பக்கவாட்டு படுக்கை வசதி, பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளதால், படிப்படியாக அவை அகற்றப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றுவதற்காக தற்போது உள்ள கீழ், மேல், நடு, பக்கவாட்டு கீ்ழ் மற்றும் மேல் படுக்கை வசதிகளுடன் சேர்த்து, புதிதாக பக்கவாட்டு நடு படுக்கை வசதியை அறிமுகப்படுத்தியது ரயில்வே.
இதனால் பயணிகள் சொல்லொணாத் துயரத்தை சந்தித்தனர். பக்கவாட்டு கீழ் படுக்கை வசதியைப் பெற்றவர்களால் உட்காரக் கூட முடியாத நிலை ஏற்பட்டது.
பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த பக்கவாட்டு நடு படுக்கை வசதியை நீக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து இந்த படுக்கை வசதி நீக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறியிருந்தார். ஆனாலும் இதுவரை அது நீக்கப்படவில்லை.
இதுகுறித்து வேலு கூறுகையில், ஏ.சி. 3-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி மற்றும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் பக்கவாட்டு நடுப்படுக்கை புதிதாக போடப்பட்டது. இது பயணிகளுக்கு இடையூறாகவும் அசவுகரியமாகவும் இருப்பதாக புகார் வந்தன.
இதனால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லா பெட்டிகளிலும் உடனே அகற்றி விட இயலாது. படிப் படியாக பக்க வாட்டு நடுப்படுக்கைகள் அகற்றப்படும்.
தற்போது இந்த படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. எனவே அவற்றை எடுப்பது சிரமமாகும். அந்த ரயில்கள் ஒர்க்ஷாப்புக்குப் போகும்போது பக்கவாட்டு நடுப் படுக்கை வசதி நீக்கப்படும். விரைவிலேயே அனைத்து நடுப் படுக்கை வசதிகளும் நீக்கப்பட்டு விடும் என்றார் வேலு.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications