கார் விலை ரூ.1 லட்சம்; சைக்கிள் விலையோ ரூ.2 லட்சம்!!
பெங்களூர்: ரூ.1 லட்சத்துக்கு நானோ கார் தயாரித்து சாமானியனையும் காரில் ஏற்றி அழகு பார்க்கிறது டாடா மோட்டார்ஸ். ஆனால் சாமானியர்களின் நிரந்தர வாகனமான சைக்கிளை மகா காஸ்ட்லியான சமாச்சாரமாக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது முருகப்பா குழுமத்தின் டிஐ சைக்கிள்ஸ்.
மிக விரைவில் ரூ.2 லட்சம் விலை கொண்ட சைக்கிள்களை தயாரித்து சந்தைப்படுத்தப் போகிறதாம் முருகப்பா குழுமம்.
சைக்கிள் ப்ரியர்களின் கனவு வாகனமாக இது இருக்குமாம். முதல் கட்டமாக இந்த ரகத்தில் 7 ஆயிரம் சைக்கிள்களை சந்தையில் விடப் போகிறார்களாம் முருகப்பா குழுமத்தினர்.
இந்த சூப்பர் சைக்கிள்களை இணைந்து தயாரிக்கவிருப்பவர்கள் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களான பியான்சி மற்றும் கன்னோடேல்.
வழக்கமாக புழக்கத்தில் உள்ள சைக்கிள்களை விட இவை 5 கிலோ வரை எடை குறைவாகவே இருக்குமாம். ட்யூப் இல்லாத டயர்கள், ஷாக் அப்சர்ப்கள் பொருத்தப்பட்டுள்ளனவாம்.
சாதாரண சைக்கிள்களின் விலை அதிகபட்சம் ரூ.2500ததான் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமங்களில் மக்கள் சைக்கிள்களை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிள்களுக்கு தாவிக் கொண்டிருப்பதால்,. ஏழைகள் வாகனமான சைக்கிள்களை பணக்கார வாகனங்களாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது டிஐ சைக்கிள்ஸ்.
யார் ஓட்டினால் என்ன... கம்பெனிக்கு கல்லாவில் பணம் கொட்டினால் சரி!
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
டாடா குழுமத்தில் வெடித்த பிரச்சனை.. சந்திரசேகரனுக்கு வேட்டு வைக்கும் நோயல் டாடா! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications