பிரமோத் மகாஜன் மகளுக்கு பாஜக சீட் மறுப்பு

மறைந்த பாஜக இளம் தலைவர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன். இவர் மகாராஷ்டிர மாநில பாஜக இளைஞர் அணியின் செயாளராக இருக்கிறார். சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புனே வந்தபோது அங்கு மிகப் பெரிய கூட்டத்தைத் திரட்டிக் காட்டி மோடியை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்தக் கூட்டம் நேர்த்தியாக நடந்ததற்காகவும் பாராட்டு பெற்றார்.
இந்த நிலையில், வட கிழக்கு மும்பை லோக்சபா தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார் பூனம். ஆனால் அவருக்கு பாஜக மேலிடம் சீட் தரவில்லை. மாறாக கிரித் சோமையா என்பவரை பாஜக நிறுத்தியுள்ளது.
இதனால் பிரமோத் மகாஜனின் சகோதரி பிரந்தியாவின் கணவரும், பாஜக பொதுச் செயலாளரும், முன்னாள் துணை முதல்வருமான கோபிநாத் முண்டே அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பீத் தொகுதியில் போட்டியிடவுள்ள முண்டே, தனது மைத்துனரின் மகளுக்கு எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என தீவிரமாக இருந்தார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்து விட்டது.
ஆனால் இது ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ அளிக்கவி்ல்லை என்று மகாராஷ்டிர பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் கவானே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் கட்சியின் தீவிர தொண்டர்கள். பூனத்திற்கு சீட் கிடைக்காததால் எங்களுக்கு வருத்தமோ, ஏமாற்றமோ, அதிர்ச்சியோ இல்லை. மேலிட முடிவை நாங்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.
ஆனால் முண்டே கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பூனத்திற்கு சீட் மறுக்கப்பட்டது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications