ரேஷன் பையில் கருணாநிதி படம்-தடை கோரிக்கை
தூத்துக்குடி: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மைதா, எண்ணெய் பாக்கெட்களில் தமிழக முதல்வரின் படம் இடம்பெற்றுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. இவற்றுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் அமிர்த கணேசன் என்பவர் ரேஷன் கடைகளில் விற்கப்படும் ஒரு ரூபாய் அரிசி, மைதா, எண்ணெய் ஆகிய பொருட்கள் தமிழக முதல்வர் படம் பொறித்த பைகளிலும், பாக்கெட்களிலும் விற்கப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நெல்லை நான்கு வழி பாதையில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படம் தேர்தல் விதி முறைகளை மீறியது எனக்கூறி அகற்றப்பட்டது. அதேபோல் பிஎச் பாண்டியன் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான நிதியில் இருந்து நெல்லை மாநகராட்சிக்கு வாங்கிய தண்ணீர் லாரியிலும் அவரது பெயர் பதிக்கப்படவில்லை.
ஆனால், தற்போது ரேஷன் கடைகளி்ல் முதல்வர் படம் பொறித்த பைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ரேஷன் கடைகளுக்கு முன்னாள் அவரது படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
ஒரிசாவில் கடந்த 21ம் தேதி தேர்தல் ஆணையம் அம்மாநில முதலமைச்சரின் படத்தை ரேஷன் கடையில் வைப்பதற்கு தடை விதித்தது. இதை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிரகாஷ் கூறுகையில், முதல்வரின் படம் இல்லாத புதிய சரக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. முதல்வரின் படம் பொறித்த பொருட்களின் வினியோகத்தை நிறுத்த சொல்லி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவிட்டுள்ளோம். ரேஷன் கடைகளுக்கு முன்னாள் இருக்கும் அவரது படங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications