திருப்பதி தொகுதியில் சிரஞ்சீவி ஏப்.4ல் வேட்பு மனு
ஹைதராபாத்: ஆந்திர சட்டசபைத் தேர்தலி்ல் திருப்பதி தொகுதியில் மெகா ஸ்டாரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி போட்டியிடுகிறார். ஏப்ரல் 4ம் தேதி வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் லோக்சபாவுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுகிறது. அதேபோல சிரஞ்சீவியும் விஜயகாந்த் ஸ்டைலி்ல் யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக நிற்கிறார்.
மறுபக்கம், தெலுங்கு தேசம் கட்சி மெகா கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளது. இக்கூட்டணியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, இடதுசாரிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இன்னொரு முனையில் பாஜக தனியாக போட்டியிடுகிறது.
தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியத்திற்கு இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்குதேசம், காங்கிரஸுக்கு பெரும் சவாலாக விளங்குகிறார் சிரஞ்சீவி.
சட்டசபைத் தேர்தலில் அவர் திருப்பம் தரும் திருப்பதியில் போட்டியிடுகிறார். இங்கு அவர் ஏப்ரல் 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதையொட்டி திருப்பதியில் பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தொண்டர்கள் சிறப்பு வரவேற்புக்கு ஏர்பாடு செய்துள்ளனர்.
பக்கத்து தொகுதியான சந்திகிரியில் நடிகை ரோஜா தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications