திருச்சியில் வலைவீசும் திமுக-மாயமாகும் மதிமுக
திருச்சி: திருச்சி மதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை திமுக தொடர்ந்து தன்வசம் இழுத்து வருகிறது. இதனால் திருச்சியில் மதிமுகவின் பலம் குன்றி வருவதாக தெரிகிறது.
சமீபகாலமாக மதிமுகவின் முக்கிய உறுப்பினர்கள் பலர் திமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். எல் கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் என இரண்டு மதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ கண்ணப்பன் ஆகியோர் திமுகவில் சேர்ந்தனர். இவர்களை தொடர்ந்து பல ஆயிரம் மதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீரங்கம் 2வது வார்டு மாநகராட்சி மதிமுக கவுன்சிலர் ரெங்கா ஏற்பாட்டில் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மதிமுகவினர் அமைச்சர் நேருவை சந்தித்து திமுகவில் சேர்ந்தனர்.
இவர்களை தொடர்ந்து நேற்று திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ராஜாமுகமது தலைமையில் 500 மதிமுகவினர் அமைச்சர் நேருவுக்கு பொன்னாடை அணிவித்து திமுகவில் இணைந்தனர். அப்போது நேரு பேசுகையில், இளைஞர்கள் திமுகவில் இணைவதை வரவேற்கிறேன் என்றார்.
இதையடுத்து மேலும் சில திருச்சி மதிமுகவினர் கட்சி மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து திமுகவினர் மதிமுகவை உடைக்க முயற்சிப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
மதிமுக புடம் போட்ட தங்கம்...
இதனால் மதிமகு மாவட்ட செயலாளர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் மலர்மன்னன் கூறுகையில்,
மதிமுகவை யாரும் உடைக்க முடியாது. தற்போது திமுகவில் சேர்ந்தவர்களில் பலர் ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தான். மற்றவர்கள் எங்கள் கட்சி உறுப்பினர்கள் கூட கிடையாது. யார்- யாரையெல்லாமே சேர்த்துக் கொண்டு மதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்கிறார்கள்.
திமுகவில் சேறுகிறவர்கள் கடலில் கலந்த பெருங்காயமாக கரைந்து போவார்கள். மதிமுக எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்து புடம் போட்ட தங்கம் போல ஜொலிக்கும் கட்சி. எதிர்காலம் அதை நிரூபிக்கும் என்றார் மலர் மன்னன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications