தேமுதிகவுக்கு முரசு சின்னம்-கட்சியினர் கொண்டாட்டம்

கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. 8.3 சதவீதம் வாக்குகளை பெற்றபோதிலும் ஒரேயொரு எம்எல்ஏதான் தேர்வு பெற்றதால் அந்த சின்னம் தேமுதிகவுக்கான அங்கீகார சின்னமாக ஒதுக்கப்படவில்லை.
இந் நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக கோரியது. ஆனால் இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
இதையசுத்து உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கக் கோரி தேமுதிக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், தமிழகத்தில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
தேமுதிக போட்டியிடாத தொகுதிகளில் முரசு சின்னத்தை பிற வேட்பாளர்களுக்கு ஒதுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தன் உத்தரவில் கூறியுள்ளது.
இதையடுத்து தேமுதிகவினர் தமிழகமெங்கும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
