விருதுநகரில் தேமுதிகவின் வேலைவாய்ப்பு முகாம் வேட்பாளர்!

Subscribe to Oneindia Tamil

Pandiarajan
விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் நிற்கும் மாபா பாண்டியராஜன், அக்கட்சியின் வேலைவாய்ப்பு முகாம்களின் மூளை ஆவார்.

விருதுநகர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பாண்டியராஜன். இதே பெயரில் இவரைச் சொன்னால் தெரியாது. ஆனால் மாபா பாண்டியராஜன் என்றால் சென்னையில் அத்தனை பேருக்கும் இவரைப் புரியும்.

மாபா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பாண்டியராஜன் இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்.

இவருடன் இவரது மனைவியும் இணைந்து மாபா நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார்.

பாண்டியராஜன் தனது மனைவியுடன் தேமுதிகவில் இணைந்து செயலாற்றி வந்தார். தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்களுக்கு மூளையாக இருப்பவர் பாண்டியராஜன்தான்.

இந்த வேலை வாய்ப்பு முகாமுக்கு கிடைத்த அமோக வரவேற்பைப் பார்த்துதான் திமுக சார்பிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் கனி மொழி மூலமாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாண்டியராஜன், விரைவில் அங்கு தனது மனைவியுடன் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+