நாளை திமுக-காங் தொகுதிப் பங்கீடு பேச்சு

தமிழகத்தி்ல் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தேமுதிக, பாஜக கூட்டணி என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய தேசிய முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசிய லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் சேரலாம் எனத் தெரிகிறது.
ஆரம்பத்தில் காங்கிரஸ் மற்றும் மனித நேய மக்கள் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக பேச்சு நடத்தியது. ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து கூட்டணிகள் உறுதியாகும் வகை இடப் பகிர்வு பேச்சை ஒத்திப் போட்டது திமுக.
இப்போது கூட்டணிகள் தெளிவாகிவிட்டதால் தனது அணியில் உள்ள கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை துவக்கவுள்ளது.
காங்கிரசுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினரும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் பேச்சு நடத்தவுள்ளனர்.
தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுமே இறுதி முடிவெடுக்கவுள்ளனர். ஆனாலும் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நாளைய கூட்டத்தி்ல் பேசப்படவுள்ளது.
கடந்த முறை திமுக 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதியிலும் போட்டியிட்டு வென்றன.
இம் முறை கூட்டணியில் பெரிய கட்சிகள் ஏதும் இல்லாத நிலையில் காங்கிரஸ் 16 தொகுதிகளைக் கேட்கிறது.
காங்கிரசுடன் பேச்சு நடத்திய பின் பிற கட்சிகளுடன் திமுக குழு அடுத்தடுத்து பேச்சு நடத்தவுள்ளது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications