அழகிரி முன்னிலை-திமுகவில் இணைந்த ராமகிருஷ்ணன்
கம்பம்: மதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் இன்று திமுக தென்மாவட்ட அமைப்பு செயலாளர் அழகிரி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.
முதல்வர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்ததை அடுத்து கண்ணப்பனுக்கும், மதிமுக தலைமையகத்துக்கும் இடையில் விரிசல் விழுந்தது. இதையடுத்து அவர் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இவரை தொடர்ந்து தானும் திமுகவுக்கு செல்லக்கூடும் என நினைத்து கட்சியினர் தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வருவதாக குற்றம்சாட்டிய எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் நேற்று தனது மதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
இதை தொடர்ந்து தனது எம்எல்ஏ பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து சட்டசபையில் மதிமுகவின் பலம் மூன்றாக குறைந்துவிட்டது.
இந்நிலையில் திமுக தென்மாவட்ட அமைப்பு செயலாளர் அழகிரி இன்று காலை மதுரையில் இருந்து கம்பம் சென்று, கம்பம் ராமகிருஷ்ணனை அவரது வீட்டில் சென்று சந்தித்தார்.
அழகிரியை சால்வை போர்த்தி வரவேற்ற ராமகிருஷ்ணன் அவரது முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.
விரைவில் சென்னை சென்று முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்திப்பார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications