திமுக கூட்டணியை கலங்கடிக்கும் ஈழத் தமிழர் சிடி
மதுரை : ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கும் காட்சிகளையும், அது தொடர்பாக தமிழக காங்கிரசார் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டி ஆகியவற்றை கொண்ட சிடி ஒன்றை தமிழகம் முழுவதும் வெளியிட எதிர்கட்சிகள் மேற்கொண்டுள்ள முயற்சி திமுக கூட்டணியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது இலங்கையில் இனப்படுகொலைவாத ராஜபக்சே அரசால் அப்பாவி தமிழர்கள் எப்படி கொத்து கொத்தாக மடிந்தார்கள், மடிகிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக படம் போட்டு காட்டுகிறது இந்த சிடி. இதில் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அளித்த பேட்டி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியின் போட்டியும் இருப்பதாகத் தெரிகிறது.
இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அலட்சிய போக்கையும், இலங்கை ராணுவத்துக்கு உதவும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு உதவும் வகையில் இந்த சிடி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டுபிடித்துவிட்ட உளவுத்துறையும், திமுக தலைமையும் இதற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என ஆலோசித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications