3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைதேர்தல் எப்போ?
சென்னை: 2 மதிமுக மற்றும் ஒரு திமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதால் காலியான 3 சட்டசபைத் தொகுதிகளுக்கு, லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் இடைத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
மேலும், மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகரும் விரைவில் ராஜினாமா செய்யப் போவதால் அதற்கும் சேர்த்து இடைத் தேர்தல் நடைபெறும்.
தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மு.கண்ணப்பன். இதேபோல கம்பம் தொகுதி மதிமுக உறுப்பினர் ராமகிருஷ்ணன். இளையாங்குடி தொகுதியிலிருந்து திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ கண்ணப்பன்.
இந்த மூன்று பேரும் தத்தமது கட்சியிலிருந்தும், எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் விலகி விட்டனர். 3 பேரின் ராஜினாமா கடிதங்களையும் சபாநாயகர் ஆவுடையப்பன் ஏற்றுக் கொண்டு விட்டார். இதனால் 3 தொகுதிகளும் காலியாகி விட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மங்களூர் (தனி) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வம், அக்கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராகி விட்டார். ஆனால் இதுவரை எம்.எல்.ஏ பதவியிலிருந்து அவர் விலகவில்லை. இதனால் அந்தத் தொகுதி இதுவரை காலியாகவில்லை.
விரைவில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக உறுப்பினர் எஸ்.வி.சேகரும் ராஜினாமா செய்யவுள்ளார். இதனால் இதுவும் காலியாகும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள 3 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தியாக வேண்டும்.
ஆனால் தற்போது லோக்சபா தேர்தல் நடக்கவிருப்பதால் இப்போது இந்தத் தொகுதிகுக்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லை. லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர்தான் இங்கு இடைத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications