பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியா-ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பு பிரமோஸ் ஏவுகணை. இந்தியாவின் பிரம்மபுத்திரா ஆறு மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ ஆகிய பெயர்களை இணைத்து பிரமோஸ் என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 20ல் மேற்கொள்ளப்பட்ட முதல் பிரமோஸ் சோதனை தோல்வியடைந்தது. இதையடுத்து இம்மாதம் 4ம் தேதி நடந்த இரண்டாவது சோதனையில் பிரமோஸ் வெற்றி கண்டது. இருப்பினும் அது வெற்றியா என்பதில் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பெக்ரானில் இன்று காலை 11.15 மணிக்கு மூன்றாவது முறையாக சோதிக்கப்பட்டது.
இந்த சோதனையை பிரமோஸ் திட்டத் தலைவர் சிவதானு பிள்ளை, டிஆர்பிஎல் இயக்குனர் வேணுகோபால், இந்திய தரைப்படையின் ராணுவ செயல்பாடு, தலைமை இயக்குனர் ஏஎஸ் சேகான், ஆர்டிலரி பள்ளியின் கமாண்டர் ராவ், ஆர்டிலரி மேஜர் ஜெனரல் விகே திவாரி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இது குறித்து டிஆர்டிஓ செய்தி குறிப்பு ஒன்று கூறுகையில், காலை 11.15 மணிக்கு பிரமோஸ் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஏவுகணை புறப்பட்ட இரண்டரை வினாடியி்ல் 290 கிமீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது.
இதோடு பிரமோஸ் சோதனை முடிவு பெற்றுவிட்டது. ராணுவத்தில் சேர்ப்பதற்கு தயாராக உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் வேறு எங்கும் கிடையாது. உலக நாடுகளில் இந்தியாவிடம் மட்டுமே இந்த வசதி இருக்கிறது.
கூட்டமாக இருக்கும் கட்டிடங்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தை இந்த ஏவுகணை மூலம் துல்லியமாக தகர்க்க முடியும். இந்திய ராணுவம் 240 பிரமோஸ் ஏவுகணைகளை கேட்டுள்ளது. குறிப்பிட்டப்படி இன்னும் இரண்டு ஆண்டுக்குள் ராணுவத்துக்கு அது கொடுக்கப்படும் என்கிறது டிஆர்டிஓ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications