ராமநாதபுரம்: தேமுதிகவின் முதல் தேர்தல்களில் ஜின்னா

Subscribe to Oneindia Tamil

Singai Jinnah
ராமநாதபுரம்: தேமுதிக சார்பில் முதல் சட்டசபைத் தேர்தல் மற்றும் முதல் லோக்சபா தேர்தல் என இரு தேர்தல்களிலும் போட்டியிட்ட பெருமை ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் சிங்கை ஜின்னாவுக்குக் கிடைத்துள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக சார்பில் கடலாடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். தோல்வியைச் சந்தித்தாலும் கூட தேமுதிகவுக்கு கிடைத்த நல்ல அறிமுகத்தைப் போலவே, ஜின்னாவுக்கும் அத்தொகுதி மக்களிடையே நல்ல அறிமுகம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சொந்த ஊராகக் கொண்டவர் ஜின்னா. பெட்ரோல் பங்க் டீலராக இருக்கிறார். எம்.ஏ. படித்தவர். ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக செயலாளராக இருக்கிறார்.

தேமுதிகவின் முதல் சட்டசபைத் தேர்தலில் நின்று கிடைத்த அனுபவமும், தோல்வி அடைந்தாலும் கூட தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஆர்வத்தோடும், சுறுசுறுப்போடும் செயல்பட்டதன் காரணமாக இப்போது தனது கட்சியின் முதல் லோக்சபா தேர்தலிலும் சீட் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

கேப்டன் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை வீணடிக்காமல், வெற்றியை இலக்காகக் கொண்டு பிரசாரம் செய்வேன் என்று கூறும் ஜின்னா, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை அமல்படுத்தவும், பல்வேறு தொழில் வளர்ச்சி, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றைக் கொண்டு வரவும் பாடுபடப் போவதாக கூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+