அதிமுக கூட்டணி: மதிமுக தொகுதிப் பங்கீடு இழுபறி

அதிமுகவுடன் மதிமுக 3 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்ட நிலையிலும் தொகுதிப் பங்கீடு நடக்கவில்லை.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 4 இடங்களில் போட்டியிட்ட மதிமுக இம்முறை 5 தொகுதிகள் கேட்டது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்புக் கொண்ட நிலையில் தான் திடீரென பாமகவும் உள்ளே வந்தது.
7 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் என்ற நிபந்தனையோடு வந்த ராமதாஸ் தனக்கு வேண்டியதை தனது பாணியில் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
இது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஈகோ பிரச்சனையாகிவிட்டது. இதனால் ராஜ்யசபா சீட் தராவிட்டாலும் பரவாயில்லை பாமக இணையாக 7 சீட்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், இதை ஏற்க ஜெயலலிதா தயாராக இல்லை. இதனால் தொகுதிப் பஙகீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதிமுகவை சமாதானப்படுத்த அதிகபட்சம் 6 தொகுதிகள் வரை ஜெயலலிதா தருவார் என்று தெரிகிறது.
நேற்று பேச்சு நடத்திவிட்டு வந்த வைகோ, பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்துகொண்டு இருக்கிறது. வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்று மட்டும் கூறிவிட்டுப் போய் விட்டார்.
இந் நிலையில் இன்று மீண்டும் பேச்சு நடக்கிறது. இதில் இறுதி முடிவு எட்டப்பட்டு தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications