புதுச்சேரியில் பாமக எம்.பி. ராமதாஸுக்கு மீண்டும் சீட்

புதுச்சேரி மாநில பாமக செயலாளராக இருப்பவர் பேராசிரியர் ராமதாஸ். புதுச்சேரி தாகூர் கல்லூரியில் முன்பு பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். மொத்தமாக 33 ஆண்டுகள் கல்விப் பணியில், பேராசிரியர் பணியில் இருந்த பழுத்த கல்வியாளர்.
பொருளாதாரம், அரசியல், சமூகவியல் என பல துறைகளில் நிரம்பிய ஞானம் கொண்டவர். பாமகவின் கொள்கைகள் வகுப்பு, பிரபலமான நிழல் பட்ஜெட்டுகள், பொருளாதார அறிக்கைகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றை தீட்டுவதில் பின்புலமாக இருப்பவர் பேராசிரியர் ராமதாஸ்தான்.
திமுகவுக்கு அன்பழகன், எங்களுக்கு ராமதாஸ் என்று பாமகவினரால் பெருமிதத்துடன் கூறப்படுபவர் பேராசிரியர் ராமதாஸ்.
புதுச்சேரி எம்.பியாக தற்போது இருந்து வரும் ராமதாஸுக்கு மீண்டும் சீட் கொடுத்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
கடந்த முறை பாமகவுக்கு புதுச்சேரியைக் கேட்டபோதே அதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் கருணாநிதியின் சிபாரிசின் பேரில், சோனியா காந்தியிடம் போராடி இந்த சீட்டைப் பெற்றார் டாக்டர் ராமதாஸ்.
இருப்பினும் கடைசி வரை காங்கிரஸார் முரண்டு பிடித்தவண்ணமே இருந்தனர். ஒரு வழியாக அவர்களை சமாதானப்படுத்தி தேர்தலில் பாமக வெற்றி பெற்றது.
இந்த முறை அதிமுக அணியில் இருக்கிறது பாமக. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதி புதுச்சேரி. எனவே இந்த முறை அங்கு வெல்லப் போவது யார் என்பது புதுச்சேரி மக்களைப் போலவே, தமிழக மக்களுக்கும் கூட ஆர்வம் அதிகமாகவே உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications