திமுக கூட்டணி: மனித நேய கட்சிக்கு சீட் உண்டா?
சென்னை: திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி நீடிக்குமா அல்லது தனித்துப் போட்யிடுமா என்பது குறித்து இன்று அந்தக் கட்சி ஆலோசனை நடத்துகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மனித நேய மக்கள் கட்சி குறைந்தபட்சம் 2 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியூரிலும், பொதுச் செயலாளர் ஹைதர் அலி வெளிநாட்டிலும் உள்ள நிலையில் அவர்களுடன் திமுக சார்பில் மைச்சர் ஸ்டாலின் பேசினார்.
இந் நிலையில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு சீட் என அறிவிக்கப்பட்டு மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் எதுவும் ஒதுக்கப்படாமல் திமுக தொகுதிப் பங்கீடு பட்டியல் வெளியாகியுள்ளது.
திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 21 சீட்களில் இந்தக் கட்சிக்கு உள்ஒதுக்கீட்டில் இடம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் அப்படிப்பட்ட நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கோரலாம். இதை மமக ஏற்குமா என்று தெரியவில்லை.
எனவே திமுக கூட்டணியில் 2 சீட், அதுவும் உள் ஒதுக்கீடு இல்லாமல் தங்களுக்கான சின்னத்தில் போட்டியிடுவது என்ற முடிவில் மமக நிர்வாகிகள் உள்ளனர்.
கட்சியின் நிர்வாகிகள் இன்று சென்னை திரும்புகின்றனர். இதையடுத்து கூட்டணி குறித்து இறுதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில் மமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 28ம் தேதியன்று காலை தமுமுக தலைவருடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், மாலையில் அமைச்சர் ஸ்டாலினும் தொலைபேசியில் பேசினர். எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திங்கட்கிழமை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறும். அதுவரை பொறுமை காக்குகுமாறு தொண்டர்களை மனித நேய மக்கள் கட்சியின் கேட்டுக்கொள்கிறது.
சமுதாயத்தின் தன்மானம் முக்கியம் என்பதில் மனித நேய மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. எனவே ஒரு தொகுதியை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி?:
இந் நிலையில் மனித நேய மக்கள் கட்சியை இழுக்க அதிமுக தரப்பிலும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.
திமுகவுக்கு விதிக்கப்பட்ட அதே நிபந்தனைகளை அதிமுக ஏற்றுக் கொண்டால் அந்தக் கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி வரலாம் என்கிறார்கள்.
அப்படி நடந்தால் திமுக அணியில் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலூர் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் மமக போட்டியிடலாம்.
ஆனால், பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக உள்ள ஜெயலலிதாவுடன் இந்தக் கட்சி கூட்டணி வைக்காது என்றும் கூறப்படுகிறது.
-
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications