செக்ஸ் தொல்லை-பீரில் விஷம்-கள்ளக்காதலன் கொலை
திருச்சி: திருச்சி அருகே செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்த கள்ளக் காதலனை அவரது காதலி பீரில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கேகே நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி (65) மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வீரம்மாள் (60) என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இவருக்கும் கணவரை பிரிந்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்எம்எஸ் காலனியில் மகன்களுடன் வசித்து வரும் சகுந்தலா (33) என்பவரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.
சுந்தரமூர்த்தி தினமும் குடித்துவிட்டு வந்து அடிக்கடி இரவு, பகல பாராமல் சகுந்தலாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனால் வெறுத்து போன சகுந்தலா, சுந்தரமூர்த்திக்கு விஷம் கொடுத்து அவரது கை, கால்களை செயலிழக்க செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக சோமரசம்பேட்டை அருகே கோப்பு கிராமத்தில் உள்ள சித்த மருத்துவர் சந்திரசேகர் என்பவரை சந்தித்து கை, கால்களை முடக்க மருந்து கேட்டுள்ளார்.
அவர் துத்தநாகம் கலந்த பொடி ஒன்றை சகுந்தலாவிடம் கொடுத்துள்ளார்.
இதையறியாத சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் இரவு சகுந்தலாவின் வீட்டிற்கு வந்து அவரை தன்னுடன் வெளியில் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு சம்மதித்த சகுந்தலா துத்தநாக பொடியை மறைத்து எடுத்து சென்றுள்ளார்.
சகுந்தலாவுடன் மோட்டார்பைக்கில் செங்குறிச்சி அருகே உள்ள சிறிய பாலத்திற்கு வந்த சுந்தரமூர்த்தி வண்டியை அங்கே நிறுத்திவிட்டு தான் வாங்கி வைத்திருந்த பீர் பாட்டில், வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை சாப்பிட ஆரம்பித்தார். இது தான் சரியான சமயம் என கருதிய சகுந்தலா அவருக்கு தெரியாமல் அந்த துத்தநாக பவுடரை பீரில் கலந்தார்.
விஷம் கலந்த பீரை குடித்த சுந்தரமூர்த்தி வாயில் நுரை பொங்க, சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீஸ் பிரேத கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உண்மையை கண்டுபிடித்த போலீசார் சகுந்தலா மற்றும் டாக்டர் சந்திரசகர் ஆகியோரை கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications