6ம் தேதி முடிவெடுக்கிறதாம் புதிய நீதிக் கட்சி
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது கட்சியின் நிலை என்ன என்பது குறித்து ஏப்ரல் 6ம் தேதி முடிவெடுக்கவிருப்பதாக புதிய நீதிக் கட்சி கூறியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தோன்றிய ஜாதிக் கட்சி புதிய நீதிக் கட்சி.
இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து இன்னும் அது முடிவு செய்யவில்லை. காரணம், அதை யாரும் கூப்பிடவில்லை.
இந்த நிலையில் தங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து ஏப்ரல் 6ம் தேதி அக்கட்சி முடிவு செய்யவுள்ளதாம்.
அவசர ஆலோசனை...
இதுகுறித்து புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாராளுமன்ற தேர்தலில், புதிய நீதிக்கட்சி போட்டியிடுவது குறித்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளை அறிந்துகொள்வதற்காக ஏப்ரல் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் அவசர ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.
நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல், ஓட்டன் சத்திரம், கொடைக்கானல், சிவகங்கை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கோபி, நாமக்கல் (வெண்ணந்தூர்), வெள்ளக்கோவில், புதுவை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், நாகை, ஜெயங்கொண்டம் (அரியலூர்), குடியாத்தம், வாணியம்பாடி, வேலூர், ஆரணி, செய்யாறு, திருவண்ணாமலை, திருவள்ளூர், பொன்னேரி, திருப்போரூர், செங்கல்பட்டு, சென்னை, திருத்தணி, காஞ்சீபுரம், ஆற்காடு, சோளிங்கர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள்.
இதன் அடிப்படையில் ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இக்கட்சி முடிவு செய்யும் என கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications