லிபிய படகு மூழ்கி 21 பலி, 232 பேரை காணவில்லை
திரிபோலி: லிபிய தலைநகர் திரிபோலியில் இருந்து 253 பேரை ஏற்றி கொண்டு, இத்தாலி நோக்கி சென்ற படகு கடலில் மூழ்கியது. இதில் 21 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு்ள்ளன. மற்றவர்களின் நிலைமே என்ன ஆனது என தெரியவில்லை. அவர்களும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக குடியேற விரும்புபவர்கள் நேரடியாக செல்லும் இடம் லிபிய தலைநகர் திரிபோலி தான்.
இங்குள்ள கடத்தல் படகு சொந்தக்காரர்கள் பணத்தை வாங்கி கொண்டு ஆப்பிரிக்கர்களை இத்தாலியில் இறக்கிவிடுவதை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் திரிபோலி வழியாக இத்தாலிக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 37,000 என்கிறது இத்தாலி அரசு. இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்ட லிபிய அரசுடன் இத்தாலி கடந்தாண்டு ஆகஸ்டில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதையடுத்து லிபியாவில் சட்டவிரோதமாக இத்தாலிக்கு செல்வதற்கு கடும் கெடுபிடி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் திரிபோலிக்கு அருகில் இருக்கும் சிடி பிலால் என்னும் இடத்தில் இருந்து இத்தாலிக்கு 250 பேரை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற மீன்பிடி கப்பல் கடலில் மூழ்கியது.
லிபிய கடலோர பாதுகாப்பு படையினர் இதுவரை 21 சடலங்களை கைப்பற்றியுள்ளனர். மற்ற 232 பேர்களின் நிலைமை என்ன ஆனதென்று தெரியவில்லை.
இதேபோல் 23 பேரை ஏற்றி கொண்டு சென்ற மற்றொரு படகும் அங்கு கடலில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்த 23 பேரும் லிபிய கடலோர பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.
இது குறித்து லிபிய அதிகாரி ஒருவர் கூறுகையில், படகில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. இந்த விபத்தில் இறந்தவர்களில் 10 பேர் எகிப்தை சேர்ந்தவர்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications