ஜெட் மீது வழக்கு தொடர்ந்தது சஹாரா!
மும்பை: தங்களுக்கு தரவேண்டிய ரூ.1,450 கோடியை தராமல் இழுத்தடிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது மும்பை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது சஹாரா குழுமம்.
ஏர் சஹாரா விமான நிறுவனத்தை சில ஆண்டுகள் முன்பு வரை நடத்தி வந்து சஹாரா குழுமம். இந்த விமான நிறுவனத்தை ரூ.1450 கோடி ரூபாய்க்கு 2007-ல் வாங்கியது ஜெட் ஏர்வேஸ்.
இந்தத் தொகையை முதல்கட்டமாக ரூ.900 கோடியும், மீதிப் பணத்தை ரூ.137.5 கோடி ஆண்டு தவணையாக 4 ஆண்டுகளிலும் செலுத்த வேண்டும் என்பது விற்பனை ஒப்பந்தம்.
ஆனால் ஒப்பந்தப்படி பணம் செலுத்தாமல் இழுத்தடிப்பதாக ஜெட் ஏர்வேஸ் மீது சஹாரா நிறுவனம் புகார் கூறி வந்தது. இது தொடர்பாக இருநிறுவனங்களுக்கும் மோதல் எழுந்தது.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்துக்கு தரவேண்டிய ரூ.1450 கோடி ரூபாயைத் தராமல் இழுத்தடிக்கும் ஜெட் ஏர்வேஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சஹாரா நிறுவனம் சில தினங்களுக்கு முன் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜெட் மீது சஹாரா வழக்குத் தொடர்ந்துள்ளதை உறுதிப்படுத்திய அந்நிறுவன செய்தித் தொடர்பாளர், விரைவில் முழு விவரமும் மீடியாவுக்கு தரப்படும் என்றார். ஆனால் ஜெட் நிறுவன அதிகாரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications