சத்தியமூர்த்தி பவனில் குமரி காங்கிரசார் கலாட்டா
சென்னை: கன்னியாகுமரி தொகுதியை திமுகவிடமிருந்து பெற வேண்டும் என்று கோரி குமரி மாவட்ட காங்கிரஸார் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கொடியை அவர்கள் அரைக் கம்பத்தில் பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. பழைய நாகர்கோவில் தொகுதி பாரம்பரியமாக காங்கிரஸ் வசம் இருந்து வந்தது. எனவே கன்னியாகுமரி தொகுதியும் நமக்கே கிடைக்கும் என இருந்து வந்தனர்அம்மாவட்ட காங்கிரஸார்.
ஆனால் அப்படி கொடுக்காமல் திமுக தானே இதை வைத்துக் கொண்டதால் காங்கிரஸார் கடும் கோபமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் அங்கு கருப்புக் கொடி ஏற்றுதல், தலைவர்களின் படங்களை எரித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெயபால் மற்றும் ஜான் ஜேக்கப் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், 24 மணி நேரத்திற்குள் கன்னியாகுமரியை காங்கிரஸ் கேட்டுப் பெற வேண்டும் எனவும் அறிவித்தனர்.
மேலும், இன்று சத்தியமூர்த்தி பவனில் குமரி மாவட்ட காங்கிரஸார் பிரமாண்ட போராட்டத்தையும் நடத்துவார்கள் என எச்சரித்திருந்தனர்.
அதன்படி இன்று ஆயிரக்கணக்கான குமரி மாவட்ட காங்கிரஸார் சத்தியமூர்த்தி பவனில் திரண்டனர்.
அங்கு கட்டப்பட்டிருந்த காங்கிரஸ் கொடியை கீழிறக்கி அரைக் கம்பத்தில் பறக்கவிட்டனர். மேலும் கருப்புக் கொடியும் ஏற்றி கோபமாக திமுகவை எதிர்த்து கோஷமிட்டனர்.
காங்கிரஸாரின் இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களை கட்சித் தலைவர் தங்கபாலு சந்தித்து அமைதிப்படுத்தினார். பின்னர் அவர்களுடன் தங்கபாலு பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications