எல்.ஜிக்கு தேர்தல் பணிச் செயலாளர் பதவி-இதயத்தில் மட்டும் இடம்?!
சென்னை: மதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, தனிக் கட்சி நடத்தி, முடியாமல் சமீபத்தில் திமுகவில் ஐக்கியமான எல்.கணேசனுக்கு திமுகவில் புதுப் பதவி தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திமுக தலைமை தேர்தல் பணிசெயலாளராக, எல்.கணேசன் எம்.பி. நியமிக்கப்படுகிறார்.
தலைமைக் கழகத்தில் இருந்து ஏற்கனவே உள்ள தேர்தல் பணிச் செயலாளர்களோடு இணைந்து-தேர்தல் நடைபெறும் பாராளுமன்ற தொகுதிகளிலும், தொடர்ந்து சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் தேர்தல் குறித்து அன்றாடம் வரக்கூடிய பிரச்சினைகளையெல்லாம் முறையாக பெற்றிடுவார்.
பின்னர் அது குறித்து கழக தலைமையிடமும், ஆங்காங்கு உள்ள பல்வேறு கழக நிர்வாகிகளிடமும் கலந்து பேசி பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்திடும் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்தபோது தஞ்சை மாவட்ட செயலாளராகவும், மதிமுகவில் அவைத் தலைவராகவும் இருந்தவர் எல்.கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணியில் நியமிக்கப்பட்டுவிட்டதன் மூலம் எல்.கணேசனுக்கு முதல்வர் கருணாநிதி 'இதயத்தில் மட்டுமே' சீட் தருவார் என்று தெரிகிறது. அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது. அவர் தஞ்சை தொகுதியை குறி வைத்து காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications