அரசு பஸ்களில் சேட்டிலைட் டிவி- சோதனை
தென்காசி: அரசு பஸ்களில் பயணிகளின் பொழுதுபொக்கிற்காக கலர் டிவிக்கள் அமைக்கப்பட்டு சினிமா, பாட்டுகள், கமெடி ஒளிபரப்பபட்டு வருகிறது. டிவிடி கேசட் மூலம் இவை ஒளிபரப்பப்படுகிறது.
அரசு பஸ்களில் உள்ள பெரும்பாலான டிவிக்கள் பழுதாகிவிட்டன. இதனால் பெரும்பாலான பஸ்களில் டிவி கூண்டு மட்டுமே காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் பயணிகல் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் பயணிகளை கவரும் வகையில் தனியார் பஸ்களை மிஞ்சும் அளவிற்கு அரசு பஸ்களில் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு செய்ய அரசு திட்டமிட்டது. அதாவது தனியார் விளம்பர நிறுவனங்கள் மூலம் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் மட்டும் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பப்படும்.
இது தனி டிவி சேனல் போன்றது. வேறு டிவி சேனல்கள் இதில் தெரியாது. தனியார் நிறுவனம் ஒளிபரப்பும் சினிமா, பாட்டு, கமெடி மற்றும் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை அரசு பஸ்களில் உள்ள டிவிக்களில் பார்த்து ரசிக்கலாம்.
இதற்கான பணிகள் முழு விச்சில் நடந்து வருகிறது. தற்போது செங்கோட்டை, பாபநாசத்திலிருந்து மதுரை மற்றும் தொலைதூர இடங்களுக்கு செல்லும் அரசு பஸ் சிலவற்றில் டிவிக்கள் பொருத்தப்பட்டு சோதனை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தனியார் விளம்பர நிறுவனம் மூலம் இனி அரசு பஸ்களில் சேட்டிலைட் டிவிக்கல் ஓளிபரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாகதான் பென் டிரைவ் முலம் அரசு போக்குவரத்து கழகம் சோதனை ஒளிபரப்பு என்ற பெயரில் சினிமா படங்கள், பாடல்கல், காமெடி ஒளிபரப்பு செய்து வருகிறது.
சேட்டிலைட் மூலம் ஒளிபரப்பு செய்யும்போது விளம்பரதாரர்கள் நிகழ்ச்சிகள் அதிகளவில் இடம் பெறும். டிவி சேனல் புதிதாக ஒளிபரப்பபடுவது போல அரசு பஸ்களில் மட்டும் இனி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சோதனை ஒளிபரப்பு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications