சிபிஐ வேலை வாங்கி தருவதாக மோசடி-3 பேர் கைது
சென்னை: சிபிஐயில் வேலை வாங்கித் தருவாக கூறி ஏமாற்றிய மூன்று பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
மதுரையை சேர்ந்த கலைமணி என்பவர் தனக்கு சிபிஐயில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று பேர் ஏமாற்றி விட்டதாக புகார் சிபிஐயிடம் புகார் தந்தார்.
அவர் கொடுத்த மனுவில்,
நான் பத்தாம் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தேன். எனக்கு டிரைவிங் தெரியும் என்பதால் சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது சென்னை ஆவடியை சேர்ந்த ஏழுமலை (50), குமார் (47), தனி (35) ஆகிய மூவரும் பழக்கம் ஆனார்கள்.
அவர்களில் ஏழுமலை பொதுப்பணித்துறையில் டெலிபோன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருவதாகவும், தனக்கு சிபிஐயில் நிறைய பேருடன் பழக்கம் இருப்பதாகவும் கூறினார். அவர் சொனனதையே குமாரும், தனியும் கூறினர்.
என்னிடம் சிபிஐயில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கினார்கள். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை.
நான் அவர்களிடம் போலீசில் புகார் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தேன். இதையடுத்து அவர்கள் ரூ 2,000 பணம் கொடுத்தால் பணியில் சேருவதற்கான ஆர்டரை வாங்கி தருவதாகக் கூறினர்.
எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பணத்துடன் வருவதாக அவர்களுக்கு தகவல் கொடுக்கும்படி கலைமணியிடம் கூறினர்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு கலைமணி ரூ.2,000 பணத்துடன் சென்னை சாஸ்திரி பவனில் இருக்கும் சிபிஐ அலுவலகம் முன் கலைமணி காத்திருந்தார். சிபிஐ படையும் காத்திருந்தது.
அப்போது ஆட்டோவில் அங்கு வந்த ஏழுமலை, குமார், தனி ஆகியோர் போலி பணி ஆர்டர் ஒன்றைக் காட்டி, கலைமணியிடம் இருந்து பணத்தை வாங்கினர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications