மூன்றாவது அணி கூட்டத்தில் பவார் பங்கேற்கிறார்
புவனேஸ்வர்: ஒரிசாவில் நடக்கும் மூன்றாவது அணி கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொள்வார் என அக்கட்சியின் பொது செயலாளர் தாரிக் அன்வர் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் வரும் 3ம் தேதி ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் சென்று, பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக்குடன் ஓரிசா மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேசவிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதம வேட்பாளராக மன்மோகனை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என சரத்பவார் தெரிவித்து, காங்கிரசுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்தார்.
இதிலிருந்து காங்கிரஸ் மீள்வதற்குள் மூன்றாவது அணி பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார் சரத்பவார். நாளை புவனேஸ்வரில் நடக்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என தேசியவாத காங்கிரஸ் பொது செயலாளர் தாரிக் அன்வர் தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டத்தில் சிபிஎம் பொது செயலாளர் பிரகாஷ் காரத், சந்திரபாபு நாயுடு ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இதை தொடர்ந்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூன்றாவது அணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே முலாயம், லாலு ஆகியோர் கைவிட்ட நிலையில் சரத்பவாரும் தற்போது கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருவது காங்கிரஸ் வட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications