அண்ணா பல்கலை எம்.பி.ஏ, எம்.சி.ஏ நுழைவுத் தேர்வு-விண்ணப்பம் வினியோகம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.சி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.
அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். ஆகிய இடங்களும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
நுழைவுத் தேர்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மே மாதம் 30-ந் தேதியும், மற்ற படிப்புகளுக்கான தேர்வு 31-ந் தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 150 ரூபாய் மட்டுமே.
ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் ஒவ்வொரு படிப்புக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்ப விநியோகம் நேற்று பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. பூர்த்தி செய்து கொடுப்பவர்களுக்கு உனடியாக புகைப்படம் எடுக்கப்பட்டு ஸ்பாட்டிலேயே ஹால் டிக்கெட்டையும் கையில் கொடுத்து விடுகின்றனர்.
முதல் 15 மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர்ஜவகர் வழங்கினார்.
நேரில் வராதவர்கள் விண்ணப்பத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏப்ரல் மாதம் 25-க்குள் அனுப்ப வேண்டும். அவர்களுக்கு தபால் மூலம் ஹால்டிக்கெட் அனுப்பி வைக்கப்படும்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications