எதிர்கட்சி மீது மட்டும் பாயும் 'குண்டாஸ்'-பாஜக
சென்னை: தேசிய பாதுகாப்பு சட்டம் எதிர்கட்சியினர் மீது தான் பாயும் என்பது வருண் காந்தி விவகாரத்தில் உண்மையாகியுள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாக பிலிபித் தொகுதி பாஜக வேட்பாளர் வருண் காந்தி, தேசிய பாதுகாப்பு சட்டம் மூலம் கைது செய்யப்பட்டார்.
ந்நிலையில் இது குறித்து இல கணேசன் வெளியிட்ட அறிக்கையில்,
'தேசம் மற்றொரு பிரிவினையைச் சந்திக்க நேரிடும்' என்று டெல்லி ஜும்மா மஸ்ஜித்தின் இமாம் புகாரியும், 'பாரதம் பல துண்டுகளாகச் சிதறும்' என்று காஷ்மீர் முப்தி முகம்மது சயீத் கட்சியின் தலைவர் மெகபூபாவும் பேசியுள்ளனர்.
'அதுபோலவே ராமர் ஒரு குடிகாரன்' என்று முதல்வர் கருணாநிதியும், 'நான் ஒரு இந்துவாக பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்' என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் கூறியுள்ளனர்.
'காவல்துறை வாகனங்களைத் தீயிடுங்கள். துப்பாக்கி ஏந்துங்கள். மார்க்சிஸ்டுகளை கொல்லுங்கள் அல்லது உயிருடன் புதையுங்கள். ஜோதிபாசுவையும் அவரது ஆள்களையும் தீர்த்துக் கட்டுங்கள். இனி அடி வாங்கிக் கொண்டிருக்க வேண்டாம். திருப்பி அடியுங்கள்' என்று மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஏ.பி.ஏ. கனிகான் சௌத்ரி பேசியதாக ஜனவரி 14-ம் தேதி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது.
அப்போதெல்லாம் பாயாத தேசிய பாதுகாப்புச் சட்டம் தேவைப்படும்போது, தங்களுக்கு தேவையில்லாதவர்கள் மீது பாயும் சட்டம் என்பது வருண் காந்தி விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது என கூறியுள்லார் இல கணேசன்.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications