பாமக வேட்பாளர்கள் இன்று பிரசாரத்தில் குதித்தனர்
திருவண்ணாமலை: பாமக வேட்பாளர்கள் இன்று காலை பிரசாரத்தைத் தொடங்கினர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு காடுவெட்டி குரு தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியிலேயே முதல் ஆளாக, 7 தொகுதிகளையும் கேட்டு வாங்கி சத்தம் போடாமல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டது. ஆனால் கூட்டணியில் பிற கட்சிகளுக்கு (சிபிஐ தவிர) இன்னும் தொகுதிப் பங்கீடு முடியாமல் குழம்பத்தில் புலம்பிக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் பாமக வேட்பாளர்கள் இன்று காலை பிரசாரத்தைத் தொடங்கினர்.
திருவண்ணாமலையில் போட்டியிடும் காடுவெட்டி குரு, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு பூஜை போட்டு பிரசாரத்தைத் தொடங்கினார்.
மாவட்ட பாமக நிர்வாகிகள், வன்னியர் சங்க பிரமுகர்களுடன் மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை முதலில் சந்தித்து ஆதரவு கோரினார்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் இன்று காலை பிரசாரத்தைத் தொடங்கினார்.
குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், அப்பகுதிகளில் பிரபலமாக உள்ளவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் மூர்த்தி.
பல்லாவரம் பகுதியில் சென்றபோது அங்கு தென்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்களைப் பார்த்து அவர்களிடம் மாம்பழம் சின்னத்தில் மறக்காமல் வாக்களியுங்கள் என்று கைகூப்பி கும்பிட்டு வாக்கு கேட்டார். இதையடுத்து பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.
கள்ளக்குறிச்சி வேட்பாளர் தன்ராஜும் இன்றே பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications