விடுதலைச் சிறுத்தைகள் தனி சின்னத்தில் போட்டி
சென்னை: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் (தனி), விழுப்புரம ஆகிய தொகுதிகளில் தனியான, ஒரே சுயேச்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று காலை சென்னை வேளச்சேரி தாய்மண் அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஒரே சுயேச்சை சின்னத்தில்
- நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஒரே சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும்.
- விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரை தேர்வு செய்யும் முழு அதிகாரம் தலைவருக்கு வழங்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கையும், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளரும் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலிலும் திருமாவளவனின் கட்சி சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications