லஞ்சம்-நெல்லையில் 7 சோதனை சாவடிகள் அகற்றம்
நெல்லை: நெல்லையில் சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரை அடுத்து போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்டிருந்த 7 சோதனை சாவடிகளை அகற்ற உத்தரவிட்டார்.
நெல்லை மாநகரத்தில் மேலப்பாளையம், கருங்குலம், பாளை கேடிசி நகர், ரெட்டியார்புரம், விஎம் சத்திரம், டக்கரம்மால்புரம், பழைய பேட்டை, தழையூத்து ஆகிய பகுதிகளில் 7 சோதனை சாவடிகள் உள்ளன.
இந்த சோதனை சாவடிகள் வழியாக சென்று வரும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை ஒரு போலீஸ் ஏட்டு தலைமையில் 3 போலீசார் சோதனை நடத்துவர். இந்த சோதனை சாவடிகளில் பணியில் உள்ள போலீசார் அவ்வழியாக சென்று வரும் லாரிகள், தனியார் வாகனங்களை நிறுத்தி மாமூல் பெற்று வந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சிலர் தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஐஜி அலுவலகம் மற்றும் தென்மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் ஆகியோருக்கு புகார் அனுப்பினர். சிலர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் புகார் அனுப்பினர்.
இதனையடுத்து சென்னை போலீஸ் உயர் அதிகாரிகள் இதுகுறித்து விவரங்களை போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா கேட்டறிந்தனர். இதையடுத்து அவர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 7 சோதனை சாவடிகளை அகற்ற உத்தரவிட்டார்.
சோதனை சாவடிகளில் பணியாற்றிய போலீசார் அந்த ஸ்டேஷன் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சோதனை சாவடிகளில் இருந்த நாற்காலிகள், மின்விளக்குகள் அகற்றப்படவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications