மன்ற கொடியை அறிமுகப்படுத்திய தனுஷ் எங்கே? கண்டா வரச்சொல்லுங்க.. கொதிக்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'எண்ணம் போலதான் வாழ்க்கை' என்று அச்சிட்டு.. தனது ரசிகர் மன்றத்தின் கொடியை சமீபத்தில் நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால், டெல்லி மாணவர் போராட்டம் குறித்து அவர் கருத்து எதையும் தெரிவிக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்களும், இளைஞர்களும் போராடத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Dhanush

ஆனால், இதுவரை அமைச்சர் பதவி விலகவில்லை. எனவே போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் கடுமையாக தாக்கினர். பெல்லட் குண்டுகளும், எலக்ட்ரிக் ஷாக் தடிகளும் மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ் திரைத்துறையை பொறுத்தவரை நடிகர் கிஷோர், நடிகரும் இசை அமைப்பாளருமான ஹிப்-அப் ஆதி, நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகை அபிராமி உள்ளிட்டோர் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருக்கின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் ஒருபடி மேலே போய், டெல்லியில் மாணவர்களுடன் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்திருந்தார். அவர் இரவு முழுவதும் போராட்டக்களத்தில் இருந்திருந்தார்.

ஆனால், நடிகர் தனுஷ் சமீபத்தில்தான் தனது ரசிகர் மன்றத்தின் கொடியை அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த போராட்டம் குறித்து அவர் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சினிமாக்களில் ரத்தம் தெறிக்க டயலாக் பேசும் தனுஷ் நிஜத்தில் நடக்கும் நியாயமான போராட்டம் குறித்து எதையும் பேசாதது ஏன்? அவரை கண்டா வரச்சொல்லுங்க என்று நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றிருப்பவர்கள் மாணவர்களும், இளைஞர்களும்தான். அவர்கள் போலீசாரிடம் லத்தியடி வாங்கி மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட வரும் காட்சிகள் எல்லோரையும் உலுக்கியிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருவதுதான் நியாயம். சினிமாக்களில் தங்களை ஹீரோக்களாக காட்டிக்கொண்ட பலரும் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது சரியில்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+