அதிமுக எம்எல்ஏ தாக்கப்பட்ட வழக்கு-எஸ்பி ஆஜராக உத்தரவு
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் எம்எல்ஏ சாமியை தாக்கி அவரது காரை உடைத்த போலீஸ் எஸ்பி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும், நஷ்ட ஈடு கோரியும் தொடர்ந்த வழக்கில் எஸ்பி மனோரகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நீதி மன்றத்தில் ஆஜராக நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் இடைத் தேர்தலில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி மேலூர் எம்எல்ஏ சாமி உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மேலூர் அதிமுக எம்எல்ஏ சாமி, மதுரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில்,
திருமங்கலம் இடைத் தேர்தலில் நான் எனது ஆதரவாளர்களுடன் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து விட்டு திரும்பி வரும் போது மதுரை எஸ்பி மனோகரன், டிஎஸ்பி ஷாஜகான், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், கூடக்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் சத்ய பிரபா ஆகியோர் கூட்டாக சேர்ந்து என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் வேண்டும் என்றே தாக்குல் நடத்தினர்.
மேலும் ரூ 25 லட்சம் பொருமானமுள்ள எனது காரை அடித்து உடைத்து விட்டனர்.
இதற்கு காரணமான மதுரை எஸ்பி மனோகரன் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தாக்குதலில் நொறுக்கப்பட்ட காருக்கு நஷ்டஈடு வழங்க வேணடும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி வரும் 9ம் தேதி எஸ்பி மனோரன் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications