'யூனியன்கள் அடம்பிடித்தால் பாஸ்டன் குளோப் மூடப்படும்' - நியூயார்க் டைம்ஸ்

அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நியூயாரக் டைம்ஸ். இதன் சகோதர பத்திரிகை தி பாஸ்டன் க்ளோப். இந்த பத்திரிகை ஊழியர்களுக்காக 13 யூனியன்கள் உள்ளன. அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகைகளில் 14வது இடத்தில் உள்ளது குளோப்.
பொருளாதாக மந்தம் காரணமாக அமெரிக்காவின் அனைத்துப் பத்திரிகைகளும் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக விளம்பர வருவாய் பெருமளவு குறையத் துவங்கிவிட்டது.
இந்த சூழலில், குளோப் பத்திரிகையின் இந்த ஆண்டு நஷ்டம் 85 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இனியும் இந்த நஷ்டம் தொடர்ந்தால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால் வேலைக் குறைப்பு, சம்பளம் மற்றும் சலுகைகள் குறைப்பு என பல கடும் நடிவடிக்கைகளில் இறங்க நியூயார்க் டைம்ஸ் முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் மொத்தம் 20 மில்லியன் டாலர் அளவுக்கு மிச்சப்படுத்த நியூயார்க் டைம்ஸ் முடி செய்தது. ஆனால் இதனை அறிவித்தபோது, ஊழியர்களின் யூனியன்கள் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டன.
ஆனால் தங்களது இந்த முடிவை யூனியன்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், உடனடியாக பாஸ்டன் குளோப்பை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நேற்று மிரட்டல் விடுத்துள்ளது நியூயார்க் டைம்ஸ் நிர்வாகம்.
பாஸ்டன் குளோப்பில் மட்டும் எடிட்டோரியல், விளம்பரம் மற்றும் விநியோகத்தில் 700 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அச்சகம், ஓட்டுநர்கள், நிர்வாகப் பிரிவுகளில் பணியாற்றுவோரைச் சேர்த்தால் 2000-ஐ நெருங்குகிறது.
இந்த நாளிதழ் தவிர, இன்னும் பல முன்னணி அமெரிக்க நாளிதழ்கள் 40 சதவிகிதம் வரை பணியாளர் குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பில் இறங்கியுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications