ஐ.ஜ.தளத்திலிருந்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் நீக்கம்!
பாட்னா: கட்சிக் கட்டுப்பாட்டை மீறி முசாபர்பூர் தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் இனியும் கட்சியில் இல்லை. அவர் நீக்கப்பட்டு விட்டார் என ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதாதளத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதை அவரது மனைவியும் நியாயப்படுத்தியிருந்தார்.
ஆனால் கட்சி முடிவை ஏற்க மறுத்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், முசாபர்பூரில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்ததன் மூலம் தானாகவே கட்சியை விட்டு விலகி விட்டார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அவருக்கும், கட்சிக்கும் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
ஐக்கிய ஜனதாதள அலுவலகத்தில் வைத்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸின் படத்தையும் நீக்கி விட்டனர்.
கடந்த புதன்கிழமைதான் முசாபர்பூரில் போட்டியிட மனு தாக்கல் செய்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அவருடன் ராஜ்யசபா எம்.பி. திக்விஜய் சிங் (இவருக்கும் கட்சியில் சீட் மறுக்கப்பட்டுள்ளது), முன்னாள் பீகார் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா, முன்னாள் எம்.பி. ராம் ஜீவன் சிங் உள்ளிட்ட திரளான ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.
இதற்கிடையே, ஐக்கிய ஜனதாதளம் சார்பில் முசாபர்பூரில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் பிரகாஷ் நிஷாத்துக்கு புதுப் பிரச்சினை வெடித்துள்ளது. அவருக்கு ஆதரவு தர மாட்டோம் என கூட்டணிக் கட்சியான பாஜக அறிவித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications