நெல்லை-தாமரை சின்னத்தில் சரத் போட்டி

மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடிய பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலும் பாஜக போட்டியிடாது என்றும் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறும் என்றும் பாஜக கூட்டணியில் இணையும் என்றும் செய்திகள் வந்தது குறித்து கருத்து தெரிவி்த்துள்ள கணேசன்,
குழம்பும் குட்டையில் மீன் பிடிக்கும் பழக்கம் பாஜகவுக்கு இல்லை. மதிமுக ஒரு கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அங்கு ஏதாவது பிரச்சனை இருக்கலாம். இந்த நேரத்தில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பது அரசியல் பண்பல்ல. நாங்கள் மதிமுகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
சரத்குமார், கார்த்திக் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. பாஜக தேர்தல் குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. அனைத்து வேட்பாளர்கள் பட்டியலும் ஒரே நாளில் வெளியிடப்படும்.
நான், திருநாவுக்கரசர், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட உள்ளோம்.
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியுடன் நான் நேரடியாகப் பேசவில்லை. ஆனாலும் அவருடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.
பாஜகவால் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்னையை தீர்க்க முடியும் என்று தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களும் நம்புகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடிய பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலும் பாஜக போட்டியிட வாய்ப்பில்லை.
எனவே இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறை கொண்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம்.
ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளன. இதுதவிர சுமார் 45 அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளன என்றார் கணேசன்.
தமிழகத்தில் 4 இடங்களில் அத்வானி பிரச்சாரம்..:
இந் நிலையில் பாஜக மூத்த தலைவரான அத்வானி நெல்லையி்ல் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் சரத்குமாரை ஆதரித்துப் பேசுவார் என்று தெரிகிரது.
மேலும் மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் செய்கிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக கூட்டணியில் டி.ஆர்:
இதற்கிடையே டி.ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக சின்னத்தில் சரத் போட்டி
நெல்லையில் சரத்குமார் பாஜதவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications