பதட்டமான 5000 வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
நெல்லை: தமிழகத்தில் பதட்டமான 5000 வாக்குச் சாவடிளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை எஸ்பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தென்மண்டல ஐஜி சஞ்சீவ் குமார், நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, நெல்லை எஸ்பி ஆஸ்ரா கார்க், கன்னியாகுமரி எஸ்பி கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி எஸ்பி தீபக் தாமோர், மாநகர துணை கமிஷனர் ஜெயசந்திரன், தனிபபிரிவு இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஏடிஜிபி ராஜேந்திரன் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. மற்ற வாக்கு சாவடிகளை காட்டிலும் பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக அளிக்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் பயன்படுத்தப்பட உள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரவுடிகள் லிஸ்ட் தாயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
வேட்பாளர்களுடன் பிரசாரத்தில் கலந்து கொள்ளும் வாகனங்களின் விவரங்களை போலீசார் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்பர். சுவர்களில் வரையப்பட்டுள்ள தேர்தல் சின்னங்களை போலீசார் அழித்து வருகின்றனர் என்றார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications