கள்ளக்குறிச்சி: 'மச்சானை' சந்திக்கும் திமுக வேட்பாளர்

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதி சங்கர், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், 1996 முதல் 2001 வரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன், 1999 முதல் 2004 வரை கடலூர் எம்.பி. நாடாளுமன்ற கட்சி துணைக் கொறடா, தேசிய தெண்ணை வளர்ச்சிக் கழகத் துணைத் தலைவர், நான்கு ஆண்டுகளாக தலைமைக் கழகத் தீர்மானக் குழு உறுப்பினர்.
1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கடலூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது திமுகவில் தலைமை தீர்மான குழு உறுப்பினராக உள்ளார்.
பல மாதங்களுக்கு முன்பு நெற்றியில் குங்குமப் பொட்டுடன் வந்து முதல்வர் கருணாநிதியின் கோபத்தை சந்தித்து சலசலப்புக்கு உள்ளானார்.
இருப்பினும் அவரது தீவிர கட்சி விசுவாசம் மீண்டும் அவருக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளது.
இந்தத் தொகுதியில் விஜய்காந்தின் மச்சானான தேமுதிக வேட்பாளரான சுதீஷை எதிர்கொள்கிறார் ஆதி.












Click it and Unblock the Notifications