தஞ்சையில் 5வது முறையாக நிற்கும் பழனிமாணிக்கம்

Subscribe to Oneindia Tamil

Pazhani Manickam
தஞ்சாவூர்: தஞ்சைத் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்று சாதனை படைத்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 5வது முறையாக வெற்றியை எதிர்நோக்கி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

சட்டம் பயின்றவரான பழனிமாணிக்கம், நாட்டாணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். முக்குலத்தோர் சமுதாயத்தில், கள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்.

மகேஸ்வரி என்ற மனைவியும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார் பழனிமாணிக்கம்.

தஞ்சை தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்ற சாதனையை வைத்திருந்தாலும் கூட 84, 89, 91 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவியும் உள்ளார். மொத்தத்தில் இது இவர் போட்டியிடும் 8வது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் கோ.சி.மணியுடன் மோதிய இவருக்கு இம்முறை சீட் கிடைக்காது என்றார்கள். எப்படியோ சீட்டை வாங்கிவிட்டார்.

மத்திய நிதித்துறை இணையமைச்சராக இவர் என்ன செய்தார் என்றால் பெரிய பதில் ஏதுமில்லை. பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சூட்கேசுடன் வரும்போது உடன் நின்றிருப்பார். இதனால் கடந்த 5 வருடமாக 5 முறை நாடு முழுவதும் எல்லா பத்திரிக்கைகளிலும் போட்டாவில் வந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+