சென்னையில் விசி பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை
சென்னை: சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை யானை கவுனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் ( 26). விடுதலை சிறுத்தை கட்சியில் இருக்கிறார். அக்கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்த சதீஷின் அண்ணன் தலில் பாலு என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து இவரை கொன்ற கும்பலை ஒருவர் என கருது பாபு என்பவரை கொலை செய்ததாக சதீஷ் மீது வழக்கு உள்ளது. இது தவிர்த்து அவர் மீது சில அடிதடி வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் சதீஷ் தனது நண்பர்களுடன் சூளை பகுதியில் இருக்கும் கண்ணப்பர் திடலில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் சதீஷை சுற்றி வளைத்தது. அவர்களது கையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்ட அவரது நண்பர்கள் பயந்து தப்பி ஓடினர்.
சதீஷ் அங்கிருந்த சுவர் ஒன்றில் ஏறி குதித்து தப்பி ஓட முயன்றார். அவரை விரட்டி சென்ற அந்த கும்பல் அவரை பிடித்தது. கழுத்து, மார்பு, தலை, தோள் என 15 இடங்களில் சராமரியாக கத்தியால் குத்தி அவரை கொலை செய்தது.
இதையடுத்து போலீஸ் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையி்ல், பாபுவின் கொலைக்கு பழி வாங்கும் வகையில் சதீஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications