Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவு 31ல் வெல்லும்-பாஜக தனிப்பெரும் கட்சியாகும்: இந்தியா டிவி கருத்துக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

India TV
டெல்லி: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் 144 தொகுதிகளைப் பெற்று பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 133 இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு 30 தொகுதிகள் கிடைக்கும் என இந்தியா டிவி கருத்துக் கணிப்பு கூறுகிறது.

ரஜத் சர்மாவின் இந்தியா டிவி என்ற இந்தித் தொலைக்காட்சி தேசிய அளவில் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 187 இடங்களும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 178 இடங்களும் கிடைக்கும், மூன்றாவது அணிக்கு 120 இடங்கள் வரை கிடைக்கும் என என்று கூறப்பட்டுள்ளது.

லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், பாஸ்வானின் லோக் ஜன சக்தி, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் 4வது அணியாக உருவெடுக்கும். நான்காவது அணிக்கு மொத்தமாக 52 தொகுதிகள் கிடைக்கும்.

இந்த அணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தந்தால் அக்கூட்டணிக்கு 235 இடங்கள் கிடைக்கும் என இந்தியா டிவி கருத்துக் கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.

ஆட்சி அமைக்கத் தேவையான எம்.பிக்கள் 272 பேர்.

எனவே 3வது அணியை உடைத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேவையான எம்.பிக்களைப் பெற முயற்சிக்கலாம்.

அதேசமயம், 3வது அணியிலிருந்து சில கட்சிகள் (அதிமுக போன்ற) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தர முன்வரலாம். அப்படி நடக்கும்போது நான்காவது அணியிலிருந்து சிலரை உருவ வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்படும்.

3வது அணியே தீர்மானிக்கும்...:

3வது அணிக்கு மக்கள் ஆதரவு சிறப்பாக இருக்குமாம். இந்த அணிக்கு 120 இடங்கள் வரை கிடைக்கும் என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. அடுத்து அரசமைக்கப் போவது யார் என்பதை இந்த அணிதான் நிர்ணயிக்கும் எனவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸும் குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜகவும் அதிக அளவிலான இடங்களைப் பெறும்.

பீகாரில், பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும். மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

பஞ்சாபில் பாதி இடங்களை காங்கிரஸ் பிடிக்கும். மேற்கு வங்கத்தில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு கணிசமான சீட்கள் கிடைக்கும்.

31 தொகுதிகள் அதிமுக கூட்டணிக்கே..

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணி 31 தொகுதிகளில் வெல்லும்.

திமுகவுக்கு 7 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 2 தொகுதிகளும் கிடைக்கும்.

உ.பியில் பாஜகவுக்கு 15 சீட்களே கிடைக்கும்.சமாஜ்வாடிக் கட்சிக்கு 30 சீட்களும் கிடைக்கும்.

3வது அணியில் இடம் பெறும் கட்சிகளில் இதுசாரிகளுக்கு 35 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 26 இடங்களும், தெலுங்குதேசம்-தெலுங்கானா ராஷ்ட்ரீரிய சமிதிக்கு 14 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 4, பிஜூ ஜனதாதளத்திற்கு 10, அதிமுகவுக்கு 31 சீட்கள் கிடைக்கும்.

மாநில வாரியாக யாருக்கு எத்தனை சீட்...

ஆந்திரா: காங்.-22, தெலுங்கு தேசம்-டி.ஆர்.எஸ்-14

அஸ்ஸாம்: காங்.-4, பாஜக-6, அஸ்ஸாம் கன பரிஷத்-4

பீகார்: ஐக்கிய ஜனதாதளம்-18, பாஜக-8, லாலு-பாஸ்வான் கூட்டணி-14

குஜராத்: பாஜக-18, காங்-8

ஹரியானா: காங்-7, பாஜக-1, லோக்தளம்-1

இமாச்சலப் பிரதேசம்: பாஜக-2, காங்.-2

ஜம்மு காஷ்மீர்: தேசிய மாநாடு-3, காங், பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி தலா 1.

கர்நாடகா: பாஜக-17, காங்-7, மதச்சார்பற்ற ஜனதாதளம்-4

கேரளா: இடதுசாரிகள்-8, காங் கூட்டணி-12

மத்தியப் பிரதேசம்: பாஜக-20, காங்-9

மகாராஷ்டிரம்: பாஜக-சிவசேனா-25, காங்-தேசியவாத காங்-23

ஒரிஸ்ஸா: பாஜக-3, காங்-8, பிஜூ ஜனதாதளம்-10

பஞ்சாப்: பாஜக-3, காங்-6, அகாலிதளம்-4

ராஜஸ்தான்: பாஜக-12, காங்-13

தமிழ்நாடு: அதிமுக-30, காங்-2, திமுக-7

உ.பி: பகுஜன் சமாஜ்-26, சமாஜ்வாடி-30, காங்-6, பாஜக-15

மேற்குவங்கம்: இடதுசாரிகள்-25, திரிணமூல்-காங்கிரஸ் கூட்டணி-17

சட்டீஸ்கர்: பாஜக-9, காங்-2

ஜார்க்கண்ட்: பாஜக-8, காங்-1, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2

உத்தராஞ்சல்: பாஜக-3, காங்-2

டெல்லி: காங்-5, பாஜக-2

வடகிழக்கு: பாஜக-3, காங்-7, தேசியவாத காங்-2, இடதுசாரிகள் 2.
மற்றவர்கள் 5

தேசிய ஜனநாயகக் கூட்டணி-187
பாஜக-144
ஐக்கிய ஜனதாதளம்-19
சிவசேனா-12
அகாலிதளம்-4
ஆர்.எல்.டி.- 3
அஸாம் கன பரிஷத்-4
இந்திய தேசிய லோக்தளம் 1


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-178
காங்கிரஸ்-133
தேசிய மாநாடு-3
தேசியவாத காங்-14
திரிணமூல் காங்-11
திமுக-7
யுடிஎப்-8
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-2

3வது அணி-121
பகுஜன் சமாஜ்-26
இடதுசாரிகள்-35
அதிமுக-31
தெலுங்குதேசம்-டி.ஆர்.எஸ்-14
எஜ்.ஜே.சி-1

நான்காவது அணி-57
சமாஜ்வாடி-30
ஆர்.ஜே.டி-எல்.ஜே.பி-15
பி.ஆர்.பி-6
பி.டி.பி-1
மற்றவர்கள் -5

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+