போதையில் ரயிலை கவிழ்த்த டிரைவர் சஸ்பென்ட்!
கோவை: கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்த சிறப்பு ரயில் ஆயத்தப் பணியின்போது டிரைவரின் குடிபோதை காரணமாக கவிழ்ந்தது. இதையடுத்து அந்த டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த 3ம் தேதி இரவு கோவையிலிருந்து சென்னைக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது 19 பெட்டிகள் அந்த ரயிலில் இணைக்கப்ப்டடு, இரண்டாவது பிளாட்பாரத்தில் வண்டியை நிறுத்த ஷன்டிங் பணி நடந்தது.
டிரைவர் பழனி என்பவர் ஷன்டிங் பணியை செய்வதற்கு வண்டியை கிளப்பினார். அப்போது அவர் நன்றாக குடித்துவிட்டு குடிபோதையில் இருந்ததால் ஷன்டிங் பணிக்காக அமைக்கப்பட்ட குறுகிய தண்டவாளத்தை தாண்டி வண்டியை வேகமாக ஓட்டியுள்ளார்.
இதில் ரயில் அருகில் இருந்த மணல் மேட்டில் மோதியது. என்ஜின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஒரு பெட்டி முற்றிலுமாக சேதமடைந்தது. அப்பகுதியில் ரயில்வே பணிகளுக்காக மணல் போடப்பட்டிருந்தால் ரயில் அருகில் இருந்த வீடுகளுக்குள் புகாமல் உயிர் பலியை தடுக்க முடிந்துள்ளது.
இந்த விபத்துக்கு காரணமான அந்த டிரைவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். என்ஜினை மீட்க ஈரோட்டில் இருந்து ராஜாளி என்ற கிரேன் கொண்டு வரப்பட்டது. ஆனால், கவிழ்ந்த என்ஜின் இரட்டை ரயில் என்ஜின் என்பதால் மீட்பு பணிக்கு இரண்டு கிரேன் தேவை என கூறப்பட்டது. இதையடுத்து மதுரையிலிருந்து பாண்டியன் என்ற கிரேன் நேற்று காலை கோவை வந்து சேர்ந்தது.
இந்த இரண்டு கிரேன்களும் சேர்ந்து என்ஜினை தூக்கி நிறுத்தின. அந்த என்ஜின் திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே என்ஜின் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு ரிப்பேர் பணிகள் முடித்த பி்ன்னர் அந்த என்ஜின் பணிக்கு திரும்பும் என தெரிகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications